
Joe Root Record: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் எவ்வாறு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியின் ம்மூலம் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிறந்த சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.