ENG vs IND: Joe Root Equals England Record With Sixth Test Century Of 2021 (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனாது. அதன்பிம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 423 ரன்களை குவித்து இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதமடித்ததுடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இச்சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத ஒரு சாதனையை முதல் ஆளாக படைத்து வரலாறு படைத்துள்ளார்.