
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதன்மூலம் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அணி நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில் இத்தொடரின் மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். நான் இந்தத் தொடரை நான் இழக்க விரும்பவில்லை. மேலும் அணியின் நிர்வாக இயக்குனர் ராக் கீயிடம் இந்த டெஸ்ட் தொடர் மட்டுமின்றி ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் விளையாட விரும்புகிறேன் என்றும் சொன்னேன். இதில் தற்சமயம் தற்சயம் ஒன்றை நான் செய்துள்ளேன்.