
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெலி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.