
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்தாண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கயத்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் அதன்பின் 5 மாதங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் விலகி வந்தார். மேற்கொண்டு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடமால் அவர், தற்போது காயத்தில் இருந்து மீண்டடு இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு இந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்கள் சாம் குக் மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் நடைபெற்றுவரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.