
Gus Atkinson added to England Squad: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதந்தவகையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லாண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.