-mdl.jpg)
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியின் சீனியர் வீரர்களான மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஜோஷ் ஹல், ஜேக்கப் பெதெல், ஜான் டர்னர், டேன் மௌஸ்லி மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கபட்டது. இதனையடுத்து டி20 அணியின் கேப்டனாக பில் சால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Australia's White Ball Tour Of England Begins Tomorrow!
— CRICKETNMORE (@cricketnmore) September 10, 2024
England have announced their line-up for the first T20I! pic.twitter.com/zNuSDPGEUy