
WTC Points Table: லார்ட்ஸில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலிலும் 66.67 வெற்றி சதவீதத்துடன் 24 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி இருந்தது.
இந்நிலையில் தாற்போது இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வீரர் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக வீரர்களுக்கு 10 சதவீத அபாரதமும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது அபராதமாக விதித்துள்ளது.