
ENG vs IND, 4th Test: மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் லியாம் டௌசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன.