Advertisement
Advertisement

இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!

இங்கிலாந்தின் இரண்டு சிறந்த வீரர்களிடம் இருந்து இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan September 01, 2024 • 11:00 AM
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்! (Image Source: Google)

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143, அஸ் அட்கின்சன் 118 ரன்கள் விளாசினர். இதைதொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 74 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 231 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 54.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 103 ரன்கள் விளாசினார்.இலங்கை அணி தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ, லகிரு குமரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 483 ரன்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது.

Trending


இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 53 ரன்களை எடுத்துள்ளது. இதில் திமுத் கருணரத்னே 22 ரன்களுடனும் , பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 430 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடவுள்ளது. 

அதேசமயம் இப்போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்நிலையில் சதமடித்தது குறித்து பேசிய ஜோ ரூட், “இங்கிலாந்தின் இரண்டு சிறந்த வீரர்களிடம் இருந்து இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும், இன்னும் நிறைய பங்களிக்க வேண்டும் என்றும் உணர்கிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

​​​​நான் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவேன் என்று நினைக்கிறேன். ஆனால் இது மிகவும் நிலையற்ற விளையாட்டு மற்றும் விஷயங்கள் மிக விரைவாக மாறும். நீங்கள் பசியுடன் இருக்க விரும்புகிறீர்கள். கடந்த சில் நாள்களாக நான் சிறப்பாகவும், பரிணாம வளர்ச்சியடையவும் விரும்புவதைப் போல ஒரு நல்ல சமநிலையைப் பெற்றிருப்பதாகவும் உணர்கிறேன், ஆனால் அதனை மிக விரைவாக செய்ய முயற்சி செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement