
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியி படுதோல்வியின் காரணமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, சர்ஃப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.