
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இலங்கை அணியுடனான நியூசிலாந்து அணியின் வெற்றியை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
வருகின்ற ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறயிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது இந்தியா.
தற்போது இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாதது இங்கிலாந்தின் காலச் சூழ்நிலையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சாமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் என வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்.