
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 - 1 என்ற சூழலில் தற்போது உள்ளன. தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சொந்த மண்ணில் அசைக்க முடியாத பலத்துடன் இருக்கும் இந்திய அணி இந்த முறை மோசமாக சறுக்கியதற்கு பிட்ச் மீது தான் பலரும் காரணம் கூறுகின்றனர். ஏனென்றால் நல்ல வேகமும், பவுன்ஸும் கொண்ட பிட்ச் என நினைத்து தான் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் முதல் நாளன்றே சராசரியாக 4.5 டிகிரி அளவிற்கு பந்து ஸ்பின் ஆனது. இதனால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பிட்ச் தந்த மாற்றத்தால் முதல் நாளில் 14 விக்கெட்களும், 2ஆவது நாளில் 16 விக்கெட்களும் சரிந்துவிட்டது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் மிதப்பில் சுற்றியதே இதற்கு காரணம் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளன. இந்திய வீரர்கள் எப்படியும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற அதிக மிதப்புடன் விளையாடியது தெளிவாக பார்த்தேன். அந்த நினைப்புடன் இருந்தால் என்ன முடிவு கிடைக்கும் என தற்போது புரிந்திருக்கும்.