
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில், ஆடுகளம் குறித்து கூறப்பட்ட அவதூறுகளை முறியடித்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வருகின்ற 17ஆம் தேதி நடக்க இருக்கிறது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலா மைதானத்தில் இருந்து இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்ட பொழுது, தர்மசாலாவில் கடுமையான குளிர்காலம் என்பதால் அங்கு மைதானத்தில் புற்கள் போதுமான அளவில் வளரவில்லை என்பதால் இந்தூர் மைதானத்துக்கு ஆட்டம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.