
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் முதலில் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறார், பிறகு அவர் ஒரு ஃப்ரான்சைஸ் அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
எனவே அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது முந்தைய பயிற்சியாளர்களிடம் இருந்த வேறுபட்டதாக இருக்கும். ஒவ்வொரு தனிமனிதனும் வித்தியாசமானவர்கள். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் அணியில் சேர்ந்தபோது, ரவி சாஸ்திரி இருந்தார். எனவே ஒவ்வொரு நபரும் வித்தியாசமாக செயல்படுகிறார்கள். கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம்.