
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரார்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது செயல்பாடுகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள்து. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியானது. ஆனால் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஃபார்மின் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது இங்கிலாந்து தொடரில் விளைடாடுவார்கள் என்று கூறப்படுகிறது.