Advertisement
Advertisement
Advertisement

இந்திய அணியின் தொடக்க வீரர் யார்? - சௌரவ் கங்குலியின் பதில்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் இறங்கவேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 27, 2023 • 21:45 PM
Ganguly feels Rahul will be criticised if he fails to score, states Gill has to wait for his chance
Ganguly feels Rahul will be criticised if he fails to score, states Gill has to wait for his chance (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல். டெஸ்ட் அணியில் ரோஹித்துடன் அவர் தான் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரராக ஆடிவருகிறார். இந்தியாவிற்காக 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 அரைசதங்கள் மற்றும் 7 சதங்களுடன்  2642 ரன்கள் அடித்துள்ளார். ராகுல் திறமையான வீரர் தான் என்றாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை. 

அண்மைக்காலமாக அவர் மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார். 2022ம் ஆண்டிலிருந்து கடைசி 11 இன்னிங்ஸ்களில் ராகுல் அடித்த ஸ்கோர் - 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ஆகும். கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்காமல் ராகுலை இறக்கியது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

Trending


ராகுல் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருப்பதால் தான் அவரை ஆடும் லெவனில் புறக்கணிக்க முடியவில்லை. அவர் துணை கேப்டனாக இருப்பதற்கே தகுதியில்லாத வீரர். அவரை நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருந்த நிலையில், ரசிகர்களும் ராகுலின் ஆட்டத்தால் அதிருப்தியடைந்தனர்.

அதன்விளைவாகவோ என்னவோ, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார் ராகுல். ராகுல் மீது விமர்சனங்களும் அழுத்தமும் அதிகரித்துவரும் நிலையில், அவருக்கு ஆதரவான குரல்களும் இருக்கவே செய்கின்றன.  கௌதம் கம்பீர் கேஎல் ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் குறித்து பேசிய சௌரவ் கங்குலி, “ஷுப்மன் கில்லுக்கான நேரம் வரும். அப்போது, அவருக்கான வாய்ப்புகளை பெறுவார். தேர்வாளர்கள், கேப்டன், பயிற்சியாளர் ஆகிய அனைவரும் ஷுப்மன் கில்லை உயர்வாக மதிப்பிடுகிறார்கள்.

அதனால் தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரை தொடர்ந்து ஆடவைக்கிறார்கள். அவரும் சிறப்பாக ஆடுகிறார். டெஸ்ட் அணியில் உங்களுக்கான (கில்) இடத்திற்காக நீங்கள் காத்திருக்க வேண்டும் என்ற செய்தியை அவரிடம் அணி நிர்வாகம் தெளிவுபடுத்தியிருப்பதாக நான் நினைக்கிறேன்”  என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement