இந்திய அணியின் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான கௌதம் கம்பீர் தனது ஆல் டைம் சிறந்த லெவன் அணியை உருவாக்கியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர். இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓய்வுக்கு பிறகு ஐபிஎல் அணிகளின் ஆலோசகராக செயல்பட்ட இவர், தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் நிகமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மற்ற வீரர்களைப் போல் கௌதம் கம்பீரும், முன்னள் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய இந்திய அணியின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். அதன்படி, கம்பீர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக தன்னையும், விரேந்திரே சேவாக்கையும் நியமித்துள்ளார் அவர், மூன்றாவது வரிசையில் ராகுல் டிராவிட்டையும், நான்காவது வரிசையில் சச்சின் டெண்டுகருக்கும் இடம் கொடுத்துள்ளார்.
Trending
அவர்களைத் தொடர்ந்து இந்த அணியின் 5ஆம் வரிசையில் விராட் கோலியையும், 6ஆம் வரிசையில் யுவராஜ் சிங்கிற்கும் வாய்ப்பு கொடுத்துள்ள கம்பீர், அணியின் 7ஆவது வரிசை வீரராகும் விகெட் கீப்பராகவும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இது தவிர்த்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கும் தனது அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
Gautam Gambhir Leaves Out Rohit Sharma and Jasprit Bumrah in his All-Time India ODI XI!
— CRICKETNMORE (@cricketnmore) September 2, 2024
Start Your SIP Investment Today @ https://t.co/3d1OtHcjHG#CricketTwitter #India #TeamIndia #GautamGambhir #MSDhoni #RohitSharma #JaspritBumrah #ViratKohli pic.twitter.com/m3MJiWpcET
மேற்கொண்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இர்ஃபான் பதன் மற்றும் ஜாகீர் கானை தேர்வு செய்துள்ளார். ஆனால் கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ள இந்த அணியின் கேப்டனாக யாரையும் நியமிக்க வில்லை. அதேசமயம் இந்திய அணியின் தற்போதுள்ள கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கேப்டனாக யாரையும் தேர்வு செய்யவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
கௌதம் கம்பீர் தேர்வு செய்த ஆல் டைம் லெவன்: வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் தோனி (கீப்பர்), அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், இர்ஃபான் பதான், ஜாகீர் கான்.
Win Big, Make Your Cricket Tales Now