
இந்திய அணி எதிவரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04அம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2027 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்திய அணியின் முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “இந்த ஆட்டத்தில் அவர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்துள்ளனர். மீண்டும், தேர்வுக் குழு 2027 உலகக் கோப்பையைப் பற்றிப் பரிசீலிக்கும். 2027 உலகக் கோப்பைக்கான அணியில் அவர்களால் இடம் பெற முடியுமா என்பதை அவர்கள் பரிசீலிப்பார்கள். 'அவர்கள் செய்து வரும் பங்களிப்புகளை அவர்களால் செய்ய முடியுமா?' அதுதான் தேர்வுக் குழுவின் சிந்தனைச் செயல்முறையாக இருக்கும்.