மிகப்பெரிய பிரச்சினைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - ஆரோன் ஃபிஞ்ச்!
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த முறை வெல்வது சற்று கடினம் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைபெறவுள்ளது. இதனால் 2011ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கோப்பையை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அணி கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றது. அதன்பின்னர் 10 ஆண்டுகளாக எப்படியாவது வென்றுவிட வேண்டும் என போராடி வருகிறது.
ஆனால் அதற்குள் பல பின்னடைவுகள் உருவாகியுள்ளன. இந்திய அணியில் உள்ள பல நட்சத்திர வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்பதிலேயே சந்தேகம் நிலவி வருகிறது. இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி தற்போது ஓய்வில் உள்ளார். அவர் 2023ம் ஆண்டு முழுக்க விளையாட மாட்டார் எனத்தெரிகிறது. இதே போல பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா எப்போது வருவார் என்பதே இன்னும் தெரியாமல் இருந்து வருகிறது.
Trending
இதற்கு இடையில் தான் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். அவர் வரும் வரையில் சூர்யகுமார் யாதவ் தான் அவரின் இடத்தை நிரப்பவுள்ளார். ஆனால் அவரும் டி20 கிரிக்கெட்டில் கலக்கியதை போல ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்காமல் இருந்து வருகிறார். இதனால் எப்படி இந்திய அணி சமாளிக்கப்போகிறது என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஆரோன் ஃபிஞ்ச் பேசியுள்ளார். அதில், “ஜஸ்பிரித் பும்ராவை மீண்டும் கொண்டு வருவது தான் இந்தியாவுக்கு பெரிய வேலையாக இருக்கும். அவர் மட்டும் குணமடைந்து பந்துவீசினால் உலகின் தலைசிறந்த பவுலராக இருப்பார். அவர் மட்டும் இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் விளையாடவில்லை என்றால், பின்னர் மிகப்பெரிய பிரச்சினைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்திய அணிக்கு ஓப்பனிங் வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தால், பின்னர் அணி வீரர்கள் அனைவருமே ஆக்ரோஷமாக ரன் குவிக்கின்றனர். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் என பவரான வீரர்கள் உள்ளனர். பெரியளவில் சொல்லிக்கொள்ளக் கூடிய பலவீனங்கள் இந்திய அணியில் இல்லை. ஆனால் அன்றைய தினத்தில் அனைத்தையும் சரியாக செய்கிறார்களா? என்பதை பொறுத்து தான் முடிவு உள்ளது. ஒருகுறிப்பிட்ட பவுலர் அல்லது பேட்ஸ்மேன் முடித்துக்கொடுக்க வேண்டியிருக்கும்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now