ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பைக்கு தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை 5 முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இன்றைய தினம் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்த நிலையில் காயம் காரணமாக, அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில் அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகின.
Trending
ஆனால் தற்போது அவர் தான் இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீத் அஹ்மத், முகேஷ் குமார் ஆகியோருடன், ரியான் பராக், அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டா, துருவ் ஜுரெல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பிடித்துள்ள அறிமுக வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
Win Big, Make Your Cricket Tales Now