
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா படை தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் தொடரையும் இந்திய அணி இழந்தது. முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் சோபிக்க தவறியது.
குறிப்பாக கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை விரைவில் இழந்த நிலையில் அவர்களை 269 ரன்கள் அடிக்க விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சமி மற்றும் சிராஜ் ஆகியோரின் பந்து வீச்சை ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பாக எதிர் கொண்டனர்.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரேட் லி, உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் உம்ரான் மாலிக், “ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவருக்கு தனி திறமைகள் நிறைய இருக்கிறது. உம்ரான் மாலிக்கை சரியாக கையாண்டால் அவர் பல அதிசயங்களை இந்தியாவுக்காக நிகழ்த்துவார். அவர் இந்திய அணிக்காக ஒருநாள் டெஸ்ட் டி20 என மூன்று கிரிக்கெட்டிலும் விளையாட திறமை இருக்கிறது.