
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்து. இதனையடுத்து இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் ரோஹித், விராட் ஆகியோருக்குப் பதிலாக இந்த ஃபார்மட்டில் யார் களமிறங்குவார்கள் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருக்கும் பெரிய கேள்வியாக உள்ளது. அந்தவகையில் ரோஹித்தின் இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் நிரப்ப தயாராக உள்ளனர். ஆனால் அதேசமயம் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சரியன வீரரை பிசிசிஐ தேடி வருகிறது. இந்நிலையில் விரட் கோலி விட்டுச்சென்ற இடத்தை இளம் வீரர் ரியான் பராக் நிரப்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மாவின் இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வாலால் நிரப்ப முடியும். அவர் உண்மையிலேயே நல்ல வீரர். தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவின் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியும் என்று நினைக்கிறேன். வெளிப்படையாக ரோஹித் சர்மா ஆனது ஒரு வருட செயல்முறை அல்ல, ரோஹித் ரோஹித் சர்மாவாக மாறுவது நீண்டகால செயல்முறையாக இருந்தது. அதேபோல் விரட் கோலியின் இடத்தை நிரப்புவ்தும் எளிதல்ல. இந்த இரண்டையும் மாற்றுவது பற்றி நீங்கள் பேசினால், அது எளிதான காரியம் அல்ல, ஆனால் இந்தியாவில் அத்தகைய திறமைகள் நம்மிடம் இருப்பதாக நான் நம்புகிறேன்.