குஜராஜ் டைட்டன்ஸ் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசியுள்ள அவர், “குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பற்றி பேசினால், அவர்கள்த் தக்கவைத்துக்கொள்ள அவர்களுக்கு பல வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால் நிச்சயம் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மீதி வீரர்களை அணியில் இருந்து விடுவிப்பார்கள் என்று நம்புகிறேன். அதன்பின் தேவைப்படும் வீரர்களை ஆர்டிஎம் மூலமாகும், ஏலத்தில் இருந்து சில நல்ல வீரர்களை தேர்வு செய்யவும் முயற்சிப்பார்கள்.
அவர்களின் அணியைப் பார்க்கும்போது, கேப்டன் ஷுப்மான் கில் தக்கவைக்கப்படுவார் என்று நம்புகிறேன். அவரைத்தொடர்ந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானும் தக்கவைக்கப்படுவார். மேற்கொண்டு முகமது ஷமி முழு உடற்தகுதியுடன் இருக்கும் பாட்சத்தில் அவரை மூன்றாவது வீரராகவும், அணியின் பினிஷராக சிறப்பாக செயல்பட்டுள்ள டேவிட் மில்லரை நான்காவது வீரராகவும் குஜராத் அணி தக்கவைக்கும் என்று தோன்றுகிறது.
அதேசமயம் ராகுல் திவேத்தியா மற்றும் சாய் சுதர்ஷான் ஆகியோரை குஜராத் அணி ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் ஆர்டிஎம் மூலமாக அவர்கள் இருவரையும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் என நம்புகிறேன். அதனால் எஞ்சியுள்ள வீரர்கள் அனைவரையும் குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஏலத்தின் மூலமாக தேர்வு செய்வதுடன், அதனை வைத்து புதிய அணியை உருவாக்க முயற்சிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் கூறியது போல் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் கேப்டன் ஷுப்மன் கில்ல தக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரஷித் கான் பற்றி பேசினால், குஜராத் அணி பெரும் தொகை கொடுத்து அவரை அணியில் சேர்த்திக்கிறது. உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். அத்தகைய சூழ்நிலையில், அவரை அந்த அணி ஏலத்தில் விடும் என்பது மிகப்பெரும் கேள்வி குறிதான். அதுபோவே டேவிட் மில்லரையும் அந்த அணி விடுவிக்காது என்ற தகவல்களே வெளியாகியுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியைப் பொறுத்தவரை, அவரது காயம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கவலையை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. காயம் காரணமாக கடந்த சீசனில் அவர் விளையாடவில்லை. மேற்கொண்டு கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, அவர் மீண்டும் களத்திற்குத் திரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹர்பஜன் சிங்கின் கணிப்பு எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now