
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹாரி புரூக் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஹாரி புரூக் பேட்டிங்கில் அரைசதம் கடந்து அசத்தியதுடன், ஃபீல்டிங்கில் 5 கேட்ச்சுகளைப் பிடித்து அசத்தினார். இதில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ், கேசி கார்டி, ஜூவல் ஆண்ட்ரூ, ஆமிர் ஜங்கு மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோரின் கேட்சுகளைபிடித்தார்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையையும் ஹாரி ப்ரூக் சமன்செய்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 1993ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுகு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் 5 கேட்ச்சுகளை பிடித்ததே இதுநாள் வரையிலும் சாதனையாக இருந்தது. இந்நிலையில் தான் ஹாரி புரூக் அவரது சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.