டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் 16 இன்னிங்ஸ்களில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை ஹாரி புரூக் முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
Trending
நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக்கே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லி. இதில் டெவான் கான்வே 11 ரன்னிலும், டாம் லேதம் 17 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 37 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதில் வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும், டாம் பிளெண்டல் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹாரி புரூக் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை ஒன்றியும் படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் 16 இன்னிங்ஸ்களில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை ஹாரி புரூக் முறியடித்துள்ளார். முன்னதாக டான் பிராட்மேன் 16 இன்னிங்ஸ்களில் 6 சதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், தறசமயம் ஹாரி புரூக் 7 சதங்களை விளாசி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
வெளி நாட்டில் அதிக டெஸ்ட் சதங்கள் (16 இன்னிங்ஸில்)
- 7: ஹாரி புரூக்*
- 6: டான் பிராட்மேன்
- 6: கென் பெர்ரிங்டன்
- 6: நீல் ஹார்வி
Win Big, Make Your Cricket Tales Now