
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் சதமடித்து அசத்தியதுடன், 171 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களையும், ஒல்லி போப் 77 ரன்களையும் சேர்த்தனர், இதன்மூலம் இங்கிலாந்து அணி 499 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் 151 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டம் லேதம், டெவான் கான்வே ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தர்.