
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப்படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ஹாரி புரூக் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் 4ஆம் இடத்தில் நீடிக்கின்றனர்.