
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14ஆம் தேதி முதல் ஹாமில்டனில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும். இதனால் நியூசிலாந்து அணி எப்படியாவது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக இழப்பதில் இருந்து தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.