
Harsha Bhogle's Predicted India squad For Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள முன்னாள் இந்திய வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, தனது அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதில் இந்திய அணி எதிவரும் ஆகஸ்ட் 19 அல்லது 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் டி20 தொடர் என்பதால், இந்த அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்துள்ளார்.