தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஹாஷிம் ஆம்லா தனது ஆல்டைம் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ஆம்லா தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அவர் தனது லெவனில் இடம் கொடுக்கவில்லை.
அவ்வாறு ஆம்லா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களைக் குவித்த வீரராக உள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி வீரர்களில் ஒருவராக ஆடம் கில்கிறிஸ்ட் கருதப்படுகிறார். மேலும், மூன்றாவது இடத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய விராட் கோலியை தேர்வு செய்தார்.
மேற்கொண்டு அணியின் மிடில் ஆர்டர் வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன்கள் ஏபிடி வில்லியர்ஸ், ஜாக்ஸ் காலிஸ் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் இந்த அணியின் விக்கெட் கீப்பராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச்சிறந்த ஃபினிஷர்களில் ஒருவருமான எம்.எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார்.