
இந்திய மகளிர் ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அதன்பின் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிராண்டு போட்டிகளிலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் நந்தினி காஷ்யப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ஷஃபாலி வார்மா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 52 ரன்களில் ஷஃபாலி வர்மா விக்கெட்டை இழக்க, 28 ரன்களில் நந்தினியும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் யஷ்திகா பாட்டியா ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.இதனால் இந்திய மகளிர் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் தஹ்லியா மெக்ராத் 3 விக்கெட்டுகளையும், சாய்னா ஜிஞ்சர், எல்லா ஹெய்வார்ட், அனிகா லெய்ரொட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.