
Heather Knight, Sandeep Lamichane Voted ICC Players Of The Month For September (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்,செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக நேபாள் அணியின் சந்தீப் லமிச்சானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக்கோப்பை சூப்பர் லீக் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.