WI vs AUS, 2nd T20I: ஹெட்மையர், வால்ஷ் அசத்தல்; ஆஸ்திரேலியாவை தவிடுபொடியாக்கிய விண்டீஸ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஹெட்மையர் 61 ரன்களையு, பிராவோ 47 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட், மிட்செல் மார்ஷ், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் இருந்து திணறியது. அந்த அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அதிலும் 101 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் 19.2 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 3விக்கெட்டுகளையு, ஷெல்டன் காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என முன்னிலையும் வகிக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now