Advertisement

இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 08, 2024 • 11:06 PM

இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 08, 2024 • 11:06 PM

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. முன்னதாக இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் டி20 தொடருக்கான வெஸ் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக ரோவ்மன் பாவெல் தொடர்கிறார். 

Trending

அதேசமயம் இலங்கை டி20 தொடரின் போது ஓய்வில் இருந்த அதிரடிய வீரர்கள் நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் மீண்டும் டி20 அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு ஆல்ஸாரி ஜோசப் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கான மாற்று வீரரகாக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் தொடர்நாயகன் விருதை வென்ற மேத்யூ ஃபோர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதுதவிர்த்து அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஷாய் ஹோப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி ஆகியோருடன் ஷமார் ஜோசப்பும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷிம்ரோன் ஹெட்மியர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், ஷாய் ஹோப், அக்கேல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட்.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement