WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அலீசா ஹீலி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Trending
அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஹீலி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு இந்தாண்டு இறுதியில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரும் நடைபெற இருப்பதால் அதற்குள் தயாராகும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .
முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் இரண்டு சீசன்களிலும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிசா ஹீலி செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளந்து அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் யுபி வாரியர்ஸ் அணி அவருக்கான மாற்று வீராங்கனையை தேர்வு செய்வதுடன், அணியின் கேப்டனையும் தேர்வு செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் யுபி வாரியர்ஸ் அணியில் தஹ்லியா மெஹ்ராத், தீப்தி சர்மா உள்ளிட்ட வீராங்கனைகள் இருப்பதால் அவர்களில் யாரேனும் ஒருவர் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கடந்த சீசனில் தீப்தி சர்மா அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதேசமயம் தஹ்லியா மெக்ராத் ஆஸ்திரேலிய மகளிர் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டுவருவதால் இருவருக்கும் இடையே கேப்டன்ஷிக்கான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுபி வாரியர்ஸ்: சோஃபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மா, தஹ்லியா மெக்ராத், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், விருந்தா தினேஷ், பூனம் கெம்மர், சைமா தாகூர், கௌஹர் சுல்தானா, சாமரி அத்தபட்டு, உமா சேத்ரி, அலனா கிங், ஆருஷி கோயல், கிராந்தி கவுர்.
Also Read: Funding To Save Test Cricket
மகளிர் பிரீமியர் லீக் தொடர் அட்டவணை:
- பிப்ரவரி 14, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, வதோதரா
- பிப்ரவரி 15, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், வதோதரா
- பிப்ரவரி 16, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ், வதோதரா
- பிப்ரவரி 17, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, வதோதரா
- பிப்ரவரி 18, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வதோதரா
- பிப்ரவரி 19, 2025 - யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், வதோதரா
- பிப்ரவரி 21, 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு
- பிப்ரவரி 22, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ், பெங்களூரு
- பிப்ரவரி 24, 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ், பெங்களூரு
- பிப்ரவரி 25, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு
- பிப்ரவரி 26, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ், பெங்களூரு
- பிப்ரவரி 27, 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு
- பிப்ரவரி 28, 2025 - டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு
- மார்ச் 01, 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு
- மார்ச் 3, 2025 - யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், லக்னோ
- மார்ச் 6, 2025 - யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ
- மார்ச் 7, 2025 - குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், லக்னோ
- மார்ச் 8, 2025 - யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ
- மார்ச் 10, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை
- மார்ச் 11, 2025 - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை
- மார்ச் 13, 2025 - எலிமினேட்டர், மும்பை
- மார்ச் 15, 2025 - இறுதிப்போட்டி மும்பை
Win Big, Make Your Cricket Tales Now