
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அணியில் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் மற்றும் 7 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ள கருண் நாயர் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பேட்டின் செய்ய களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டி முன்னதாக தனது கம்பேக் குறித்து பேசிய கருண் நாயர், “நான் ஒவ்வொரு நாளும் விழித்தெழும் போதும் என் முதல் எண்ணம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும், மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான். அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைத்தது, பசியுடன் வைத்திருந்தது, ஒவ்வொரு நாளும் பயிற்சிக்குச் செல்வதற்கும் பயிற்சிக்குச் செல்வதற்கும் உந்து சக்தியாக இருந்தது.