
உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விதர்பா அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜித்தேஷ் சர்மா ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16ஆவது ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா இடம் பிடித்திருந்தாலும் இதுவரை அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆசிய விளையாட்டுபோட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.