
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல், “தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெறுவது மிகவும் நல்லது. வெற்றி பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, நாங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். அதுதான் எங்களுடைய திட்டமாக உள்ளது, மேலும் இதுவரை அது வெற்றிகரமாகவும் உள்ளது. அணியில் தற்போது அனைத்து விசயங்களும் நன்றாக நடந்து வருகிறது.