கோலி, ராகுல் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
விரட்ட கோலி - ராகுல் என்ன செய்தார்கள் என எனக்கு புரியவில்லை. அவர்கள் பவுண்டரியும் அடிக்கவில்லை. சிங்கிள் ரன்களும் ஓடவில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், விராட் கோலி, கே எல் ராகுல் ஆட்டத்தை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தப் போட்டியில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இரு அணிகள் இடையேயான இந்த போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா முதல் சில ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால், அவர் 47 ரன்களில் ஆட்டமிழந்த பின் இந்திய அணியின் ரன் ரேட் மொத்தமாக படுத்தே விட்டது.
Trending
ஷுப்மன் கில் 4 ரன்களிலும், ரோஹித் 47 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிளும்ன் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி - கே எல் ராகுல் கூட்டணி அமைத்து பேட்டிங் ஆடினர். அவர்கள் ஆடும் போது இருவருமே தடுப்பாட்டம் ஆடுவதில் தான் கவனம் செலுத்தினர். விராட் கோலி - கேஎல் ராகுல் கூட்டணி 109 பந்துகளில் வெறும் 69 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இவர்கள் கூட்டணியில் வெறும் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது. அதிக அளவில் சிங்கிள் ரன்கள் ஓடுவதிலும் கூட தயக்கம் காட்டியது இந்த ஜோடி.
ஒவ்வொரு ஓவருக்கும் 3 - 4 ரன்கள் அடிப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஒரு கட்டத்தில் விராட் கோலி 54 ரன்களிலும், கே எல் ராகுல் 66 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின் இந்தியா 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. குறைவான ஸ்கோர் எடுத்ததால், ஆஸ்திரேலியாவை அடுத்து சமாளிக்க முடியாமல் திணறி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய அணி.
இந்த நிலையில் தான் சுனில் கவாஸ்கர் அவர்கள் இருவரையும் விமர்சனம் செய்துள்ளார். பிட்ச் மெதுவாக இருந்ததால் பவுண்டரி அடிக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஒன்று, இரண்டு ரன்கள் ஓடுவதும் கூடவே முடியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "விக்கெட் விழுந்து விட்டது, பிட்ச் மெதுவாக இருக்கிறது என்றாலும் ஒன்று, இரண்டு ரன்கள் ஓடி எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவும் இங்கே தொடர்ந்து நடைபெறவில்லை. விரட்ட கோலி - ராகுல் என்ன செய்தார்கள் என எனக்கு புரியவில்லை. அவர்கள் பவுண்டரியும் அடிக்கவில்லை. சிங்கிள் ரன்களும் ஓடவில்லை." என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now