மும்பை இந்தியன்ஸுடனான ரோஹித்தின் பயணம் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா நிச்சயம் இடம்பெற மாட்டார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியானது தக்கவைக்கும் என்றும் சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ரோஹித் சர்மா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் தொடர்வாரா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா இருப்பாரா அல்லது செல்வாரா? என்பது ஒரு பெரிய கேள்வி. தனிப்பட்ட முறையில், அவர் இனி மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்று நான் உணர்கிறேன். மேலும் ஏலத்தில் நீங்கள் எந்த வீரரைத் தேர்வு செய்தாலும் அவர் உங்கள் அணிக்காக மூன்று ஆண்டுகள் நிச்சயம் விளையாடுவார். ஆனால் எம் எஸ் தோனியைத் தவிர.தோனி மற்றும் சிஎஸ்கேவின் கதை மிகவும் வித்தியாசமானது.
ஆனால் மும்பை இந்தியன்ஸில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறலாம், அல்லதும் மும்பை அணி வெளியேற்றலாம் என்று நினைக்கிறேன். எதுவும் நடக்கலாம் ஆனால் ரோஹித் இங்கு தக்கவைக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. இதுகுறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை ஆனால் ரோஹித் ஒருவேளை விடுவிக்கப்படுவார் என்று நினைக்கிறேன். மேலும் அவரை பிற அணிகள் டிரேடிங் முறையில் வாங்கவும் அதிக வாய்ப்புள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் அவர் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கமால் மற்ற அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார். ஆனால் ஒருவேளை அவ்வாறு நடைபெறவில்லை எனில், நிச்சயம் வீரர்கள் ஏலத்தில் அவர் பங்கேற்றாகவேண்டும். ஏனெனில் மும்பை இந்தியன்ஸுடனான அவரது பயணம் முடிந்துவிட்டதாக நான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மும்பை அணிக்காக இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மா கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now