
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த மார்ச் 9ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யாரும் எதிர்பாராத வகையில் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக ஒருநாள் விக்கெட்டை கைப்பற்றிய நிலையிலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேற்கொண்டு பும்ரா போன்றா வீரர் இல்லாத நிலையிலும் சிராஜுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
அதிலும் குறிப்பாக சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதேசமயம் சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார்.