விராட், ராகுல் ஆகியோர் ஆட்டமிழக்கும் வரை நிம்மதியாக இருந்ததில்லை - ஜஸ்டின் லங்கர்!
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆட்டமிழக்கும் வரை கொஞ்சம் கூட நிம்மதியாக இருந்ததில்லை என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் முடிவடைந்ததில் இருந்து லக்னோ அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த அணி தரப்பில் சிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கும், அர்ஷின் குல்கர்னி ரூ.20 லட்சத்திற்கு, தமிழக வீரர் சித்தார்த் ரூ.2.4 கோடிக்கும், ஆஷ்டன் டர்னர் ரூ.1 கோடிக்கும், டேவிட் வில்லி ரூ.2 கோடிக்கும், முகமது அர்ஷத் கான் ரூ.20 லட்சத்திற்கும் வாங்கப்பட்டனர்.
இதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியில் இருந்த தேவ்தத் படிக்கல் லக்னோ அணி ட்ரேட் செய்யப்பட்டார். இதன் மூலம் வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விக்கெட் கீப்பர் பணியையும் மேற்கொள்ள உள்ளதாகவும் லக்னோ அணி நிர்வாகத்துடன் பேசியிருக்கிறார்.
Trending
ஏற்கனவே இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய கேஎல் ராகுல், முன்பை விடவும் அதிக தெளிவுடனும் அணிக்கு என்ன தேவை என்ன என்பதை அறிந்தும் விளையாடி வருகிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார்.
இதனால் லக்னோ அணியை கேஎல் ராகுல் எப்படி வழிநடத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பயிற்சியாளராக பணியாற்றவுள்ள ஜஸ்டின் லாங்கரும் கேஎல் ராகுலும் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Justin Langer on Virat Kohli and KL Rahul pic.twitter.com/whTgz0l5Ya
— CRICKETNMORE (@cricketnmore) December 30, 2023
இந்த நிலையில் எல்எஸ்ஜி கேப்டன் கேஎல் ராகுல் குறித்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், “ஆஸ்திரேலியா அணிக்கு பயிற்சியாளராக செயல்படும் போது இந்திய அணிக்கு எதிராக விளையாடுகையில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஆட்டமிழக்கும் வரை கொஞ்சம் கூட நிம்மதியாக இருக்க முடியாது. அனுபவம் மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சு மற்றும் ஸ்பின் இரண்டையும் சமமாக விளாசக் கூடியவர். லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now