Advertisement

தனது சேவையை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார் - லக்ஷ்மண் சிவராமாகிருஷ்ணன்!

இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவ முன்வந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனின் சேவையை ஏற்க தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 23, 2023 • 20:24 PM
'I offered my services to Rahul Dravid but he said...': Laxman Sivaramakrishnan
'I offered my services to Rahul Dravid but he said...': Laxman Sivaramakrishnan (Image Source: Google)
Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நீண்ட தொடர் முடிந்துவிட்டது. டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது. ஒருநாள் உலக கோப்பைக்கு முன் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணிக்கு சிறு சறுக்கலே.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் எல்லா காலக்கட்டத்திலுமே இந்திய அணி சிறந்த அணியாக திகழ்ந்திருக்கிறது. ஆனால் இப்போது, சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவதுடன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 ஃபார்மட்டிலும் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் ஜொலித்த அளவிற்கு இந்திய ஸ்பின்னர்கள் கவரவில்லை.

Trending


கடைசி ஒருநாள் போட்டியில் கூட ஆடம் ஸாம்பா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். டெஸ்ட் தொடரில் நாதன் லையன், டாட் மர்ஃபி, மேத்யூ குன்னெமன் ஆகிய ஸ்பின்னர்களும், ஒருநாள் தொடரில் ஆடம் ஸாம்பா, அஷ்டான் அகர் ஆகியோரும் அசத்தினர். 

சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசியபோது, ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான ஃபீல்டிங் செட்டப் அந்த அணிக்கு பெரியளவில் உதவியது. ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் பந்துவீசியபோது இந்திய வீரர்கள் அடித்த ஷாட் எல்லாம் ஃபீல்டர்கள் கைக்கு சென்றது. ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் வீசியபோது அப்படி நடக்கவில்லை.

இந்திய அணியின் பெரிய பலமே ஒரு காலத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் தான். ஆனால் இப்போது அப்படியான சூழல் இல்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவ, முன்னாள் ரிஸ்ட் ஸ்பின்னர் சாய்ராஜ் பஹுதுலே இந்திய அணி பயிற்சியாளர் குழுவில் இணைந்தார். அவர் இந்திய ஸ்பின்னர்களை வழிநடத்தினார். அவரது இணைவு எந்தவிதத்திலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கவில்லை.

இந்நிலையில், இந்திய அணிக்குத் தான் உதவ முன்வந்ததாகவும், ஆனால் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டதாகவும் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதில், “இந்திய ஸ்பின்னர்களுக்கு நான் உதவுகிறேன் என்று ராகுல் டிராவிட்டிடம் கேட்டேன். ஆனால் அவருக்கு நான் சீனியர் என்பதால், அவருக்கு கீழ் நான் பணிபுரிவதை அவர் விரும்பவில்லை. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்று லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 9 டெஸ்ட் மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முறையே 26 மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக பெரியளவில் ஆடிய அனுபவம் இல்லையென்றாலும், லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தரமான சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement