-mdl.jpg)
இந்திய கிரிக்கெட் தற்போது அதிகப்படியான மாற்றங்களை உள்வாங்க வேண்டிய காலத்தில் இருக்கிறது. புதிய வீரர்கள் வந்து பலரின் இடத்தை நிரப்ப இருக்கிறார்கள். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ஜிதேந்தர் சர்மா போன்ற வீரர்கள் மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக வெளிப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த நான்கு மாதம் காலம் கழித்து இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்தியக் கிரிக்கெட்டில் இந்த உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடப்பதால் மட்டுமே முக்கியமானதாக அல்லாமல், இந்தத் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் நடக்க இருப்பதாலும் மிக முக்கிய தொடராக கருதப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவிடம் சச்சின் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் கிடைத்து விட்டார்களா என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.