Advertisement

அன்று ஷுப்மன் கில்லிடம் நான் பேசியது இதுதான் - மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில்லுடனான மோதல் குறித்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.

Advertisement
அன்று ஷுப்மன் கில்லிடம் நான் பேசியது இதுதான் - மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
அன்று ஷுப்மன் கில்லிடம் நான் பேசியது இதுதான் - மனம் திறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 13, 2024 • 02:12 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. அதிலும் இத்தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற 5ஆவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று முடிந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 13, 2024 • 02:12 PM

காரணம் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஷுப்மன் கில்லுடன் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் வார்த்தை மோதலில் ஈடுப்பட்டார். கடைசி போட்டியில் 2ஆவது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த பேட்ஸ்டோவ், கில்லிடம் ஆண்டர்சனை ஓய்வு எடுக்க கூறினாயா? அடுத்த 2 பந்தில் உன்னை விழ்த்தினார் பார்த்தாயா என கேட்டார். 

Trending

ஆனால் ஷுப்மன் கில், அதற்கு என்ன சதம் அடித்த பிறகு தானே அவுட் செய்ய முடிந்தது என பதிலளித்தார். நீங்கள் இந்த தொடரில் எத்தனை சதம் அடித்தீர்கள் என கில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீ இதுவரை எத்தனை ரன்களை எடுத்திருக்கிறாய் பேச்சை நிறுத்து என கூறினார். உடனடியாக சர்ஃப்ராஸ் கானும் ஷுப்மன் கில்லுடன் இணைந்து ஜானி பேர்ஸ்டோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

அவர்களுக்கு இடையேயான அந்த பிரச்சனை முடிந்த ஒருசில பந்துகளிலேயே ஜானி பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்தார். இது அப்போது சர்ச்சையானது. பெரும்பாலானோர் ஷுப்மன், சர்ஃப்ராஸுக்கு அதரவாகவும், சிலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற அனுபவ வீரர்களை இப்படி தான் பேசுவீர்களாக என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் அந்த மோதலில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் ஷுப்மன் கில்லிடம் இந்திய மண்ணை தவிர வெளிநாடுகளில் ஏதாவது ரன்கள் அடித்து இருக்கிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது என பதிலளித்தார். 

அடுத்த 2 பந்துகளில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டேன். மேலும் குல்தீப் எனது ஓவரில் ஒரு ரன் எடுத்து எதிர் திசைக்கு ஓடி வந்தார். நானும் எனது அடுத்த பந்தை வீசுவதற்காக திரும்பி சென்று கொண்டிருந்தேன். அப்போது உங்களது 700ஆவது விக்கெட் நான் தான் என்று நினைக்கிறேன் எனவும் என் மனதில் அப்படிதான் தோன்றுகிறது எனவும் கூறினார். உடனே நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நகர்ந்தோம்" என்று தெரிவித்தார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் இந்த கருத்தானது தற்போது பேசுபொருளாக மாறி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement