
ICC Nominates Virat Kohli For ICC Men's Player Of The Month Award Along With David Miller, Sikandar (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரர் வீராங்கனைகளைத் தேர்வு செய்து கடந்த ஆண்டு முதல் ஐசிசி விருதை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி இன்று பரிந்துரைத்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, முதன்முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா ஆகியோருடன் விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.