ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பட்டியல் இன்று வெளியானது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.
அதன்படி ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதுக்கான வீரர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரைத்துள்ளது.
அதன்படி ஆடவருக்கான பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அதேசமயம் மகளிர் கிரிக்கெட்டிலிருந்து தாய்லாந்தின் நட்டாயா பூச்சத்தம், அயர்லாந்தின் கேபி லீவிஸ் மற்றும் எமியர் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now