டி20 உலகக்கோப்பை 2022 - மிஷன் மெல்போர்ன் நோக்கி இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். டி 20 உலக கோப்பையில் பங்கேற்கச் செல்லும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு பெர்த் மைதானத்தில் 13ஆம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
அதன்பின் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இரு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now