Advertisement

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஹாரி புரூக்; டாப்-10ல் ஷுப்மன், ஜேமி ஸ்மித்!

சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Advertisement
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஹாரி புரூக்; டாப்-10ல் ஷுப்மன், ஜேமி ஸ்மித்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஹாரி புரூக்; டாப்-10ல் ஷுப்மன், ஜேமி ஸ்மித்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 09, 2025 • 02:51 PM

ICC Test Players Rankings: ஐசிசி வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 09, 2025 • 02:51 PM

இங்கிலாந்து - இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

பேட்டர்கள் தாரவரிசை

முன்னதாக ஜோ ரூட் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் சோபிக்க தவறினார். அதேசமயம் ஹாரி புரூக் அந்த போட்டியில் சதமடித்து அசத்தி இருந்தார். இதன் காரணமாக ஹாரி புரூக் ஒரு இடம்முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் கேன் வில்லியம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளார். 

மேற்கொண்டு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் ரிஷப் பந்த் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் இரண்டாவது டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தும் 16 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

இதுதவிர்த்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசிய வியான் முல்டர் 34 இடங்கள் முன்னேறி 22ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 39ஆவது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் பெட்டிங்ஹாம் 4 இடங்கள் முன்னேறி 43ஆவது இடத்தையும், ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் க்ரீன் 4 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 8 இடங்கள் முன்னேறி 60ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் தொடர்கிறார். அதேசமயம் இந்திய வீரர் முகமது சிராஜ் 6 இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகியோரும் 6 இடங்கள் முன்னேறி 29, 31ஆவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், இந்திய வீரர் ஆகாஷ் தீப் 39 இடங்கள் முன்னேறி 45ஆம் இடத்தை பிடித்துள்ளார். 

இதுதவிர்த்து தென் ஆப்பிரிகாவின் வியான் முல்டர் 4 இடங்கள் முன்னேறி 48ஆவது இட்த்தையும், கோடி யூசுஃப் 32 இடங்கள் முன்னேறி 55ஆவது இடத்தையும், இங்கிலாந்தின் ஜோஷ் டங் 3 இடங்கள் முன்னேறி 58ஆவது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 23 இடங்கள் முன்னேறி 80ஆவது இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் சேனுரன் முத்துசாமி 10 இடங்கள் முன்னேறி 94ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். 

ஆல் ரவுண்டர்கள் தரவரிசை

Also Read: LIVE Cricket Score

டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், வங்கதேச அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் 12 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு கார்பின் போஷ் 5 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப் 6 இடங்கள் முன்னேறி 19ஆம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement